logo

பென்னாகரம் அருகே முழுமையாக தார்சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி, நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு - பாதாகை ஏந்தி போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது பாலிகாடு கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் அரகாசனஅள்ளி வழியாக செல்லக்கூடிய சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதனால் பொதுமக்கள் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அரகாசன அள்ளி முதல் பாலிகாடு வரை தார் சாலை அமைக்க 2020-2021 ஆண்டு 2,150 மீட்டர் நீளம் கொண்ட தார்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. அந்த தார் சாலைக்கான பணி தொடங்கப்பட்ட நிலையில் ஒரு பகுதி மட்டும் தார் சாலை அமைக்காமல் குண்டு குளியுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக கருப்பு கோடி கட்டி, பாதாதைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த வழியாக முத்தப்பாநகர்,நெக்குந்தி, எரபையனஅள்ளி, கருப்பையன அள்ளி போன்ற பல ஊர்களுக்கு மக்கள் சென்றுவர அவதிப்படுவதாகவும், இது குறித்து அரசு அலுவலகம் மற்றும் ஒப்பந்ததாரரை பலமுறை அணுகியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல இன்னல்களை நாங்கள் சந்தித்தனர். எனவே அரசு உடனடியாக விடுபட்டிருக்கும் தார் சாலையை முழுமையாக அமைக்காத பட்சத்தில் நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.

0
990 views